search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஐ.டி. மெட்ராஸ்"

    உலகின் முதல் லீப் மைக்ரோஸ்கோப் சாதனத்தை ஐ.ஐ.டி. மெட்ராஸ் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை சார்பில் ரிமோட் முறையில் இயங்கக்கூடிய மைக்ரோஸ்கோப்-ஐ அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய வகை மைக்ரோஸ்கோப் கொண்டு அணுக்களை மிகவும் துல்லியமாக பார்க்க முடியும். லோக்கல் எலெக்ட்ரோட் ஆட்டம் ப்ரோப் (Local Electrode Atom Probe) என அழைக்கப்படும் இந்த மைக்ரோஸ்கோப் நாட்டின் எட்டு ஆய்வு மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருப்பதாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று பல்வேறு சாதனங்கள் உலகில் கிடைத்தாலும், புவியியல் அடிப்படையில் பிரிந்து இருக்கும் ஆராய்ச்சியாளர்களால் வெவ்வேறு முனையங்களில் இருந்து இயக்க கூடிய உலகின் முதல் மைக்ரோஸ்கோப் சாதனமாக இது இருக்கிறது என ஐ.ஐ.டி. மெட்ராஸ் அறிவித்திருக்கிறது.

    மேலும், "நாட்டின் முன்னணி எட்டு ஆய்வு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை," என தெரிவித்திருக்கிறது. 

    புதிய லீப் மைக்ரோஸ்கோப் சாதனத்திற்கான முனையங்கள் ஆய்வில் கலந்து கொண்ட எட்டு முன்னணி ஆய்வு நிறுவன வளாகங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாம்பே, டெல்லி, கான்பூர், கராக்பூர், ரோபார்  ஐ.ஐ.டி. மற்றும் பவுடர் மெட்டலர்ஜி மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச ஆய்வு மையம் உள்ளிட்டவை முறையே ரூ.2 கோடிகளை ஆய்வுக்காக செலவிட்டுள்ளன.

    இதுதவிர அணு அறிவியல் பிரிவுக்கான ஆய்வு கூட்டமைப்பு ரூ.3 கோடியை ஆய்வுக்காக செலவிட்டிருக்கிறது. மற்ற நிதி உதவிகளை அறிவியல் மர்றும் தொழில்நுட்பத்திற்கான நானோ திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×